தேசிய செய்திகள்

நாகாலாந்து துணை முதல்-மந்திரி மகன் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்

அவருடைய இறுதி சடங்குகள் இன்று மதியம் 1 மணியளவில் தொடங்கும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திமபூர்

நாகாலாந்து துணை முதல்-மந்திரி மகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து கொண்டார்.

நாகாலாந்து துணை முதல்-மந்திரி டி.ஆர். ஜெலியாங்கின் மகன் குச்சி ரங்காவ் ஜெலியாங். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர், திமபூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பிரதமர் இரங்கல்

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்ட செய்தியில், நாகாலாந்து துணை முதல்-மந்திரி டி.ஆர். ஜெலியாங்கின் மகன் குச்சி ரங்காவ் ஜெலியாங்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. துயரம் நிறைந்த இத்தருணத்தில் ஜெலியாங் குடும்பத்தினருடனும் அவர்களது நண்பர்களுடனும் எனது எண்ணங்கள் உள்ளன.

இறுதி சடங்குகள்

அவருடைய மறைந்த ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார். அவருடைய இறுதி சடங்குகள் இன்று மதியம் 1 மணியளவில் தொடங்கும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குச்சி ரங்காவ் உடலுக்கு முதல்-மந்திரி நெய்பியூ ரியா, நாகாலாந்து மந்திரிகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT