மேற்கு வங்காள முதல் மந்திரி சுவேந்து அதிகாரி 
தேசிய செய்திகள்

சட்ட விரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்காள அரசு உத்தரவு

சட்டவிரோத குடியேறிகளை அவா்களது தாய்நாட்டுக்கு அனுப்பும் வரை தற்காலிகமாக இந்த மையங்களில் தங்கவைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை புதிய அரசு எடுத்து வருகிறது.அந்த வகையில், மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மாவட்டந்தோறும் மையங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டது.

சட்டவிரோத குடியேறிகளை அவா்களது தாய்நாட்டுக்கு அனுப்பும் வரை தற்காலிகமாக இந்த மையங்களில் தங்கவைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.. ரோஹிங்கயாக்கள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக கடந்த ஆண்டு மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தோ்தலில் வென்று ஆட்சியமைத்தால் சட்டவிரோத குடியேறிகளை மாநிலத்தில் இருந்து வெளியேற்றுவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.