தேசிய செய்திகள்

சபரிமலை கோவில் கொடிமரம் அருகே பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

18 புனிதப் படிகள் மீது ஏறி கோவிலின் கொடிமரம் அருகே வந்தபோது திடீரென பாபு மயங்கி விழுந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேரூரில் கடை நடத்தி வந்த கே.வி.பாபு(வயது 63) என்பவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். இன்று காலை சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக கோவிலில் உள்ள 18 புனிதப் படிகள் மீது அவர் ஏறினார்.

இந்நிலையில், கோவிலின் கொடிமரம் அருகே வந்தபோது திடீரென பாபு மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் கோவில் வளாகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார். அவரது உடல் பம்பாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT