தேசிய செய்திகள்

திருப்பதியில் 15 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் நேற்று முன் தினம் ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 84 ஆயிரத்து 220 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 40 ஆயிரத்து 542 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 16 லட்சம் ஆகும்.

அன்று 3 லட்சத்து 99 ஆயிரம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 17 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. 3 ஆயிரத்து 342 பக்தர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்” டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.