தேசிய செய்திகள்

திருப்பதியில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.92 கோடி ஆகும்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 70 ஆயிரத்து 124 பக்தர் கள் சாமி தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 298 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 92 லட்சம் ஆகும். அன்று 4 லட்சத்து 3 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 61 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. திருமலை அஸ்வினி மருத்துவமனையில் 3,508 பேர் சிகிச்சை மற்றும் மருத்துவச் சேவைகளை பெற்றனர்.

இந்தநிலையில் நேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி சிலாத்தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசன பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT