புதுடெல்லி,
டெல்லி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்ததா என்பது குறித்து மத்திய அரசுச் செயலாளர் விளக் கம் அளித்துள்ளார்.
சீனாவில் கடந்த ஆண்டு நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நாகரிக பேச்சுவார்த்தை நடத்துவதற்கென ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்கீழ் தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். அதன்படி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிக பேச்சு வார்த்தை கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் 3 நாட்கள் கூட்டம் டெல்லியில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதில், அறிஞர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள், கலாசார பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உறுப்பு நாடுகளிடையே கலாசார நாகரிகத்தை பகிர்ந்து கொள்வது குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். கூட்டத்தில், பாகிஸ்தான் மந்திரி முசாதிக் மாலிக் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதனிடையே நேற்று நிருபர்களை சந்தித்த மத்திய கலாசார செயலாளர் விவேக் அகர்வாலிடம் "இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்ததா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு விவேக் அகர்வால், "அதிகாரப்பூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இருப்பினும், விருந்தின்போது பாகிஸ்தான் மந்திரியுடன் இந்திய தரப்பு உறுப்பினர்கள் உரையாடினர். கூட்டத்திலும் அவருடன் உரையாடினர்” என்று கூறினார்.
3 நாட்கள் கூட்டத்தின் இறுதியில், 'இந்திர பிரஸ்தா அறிவிக்கை' என்ற அறிவிக்கை நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சட்டவிரோத ஆள்கடத்தல் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். கலாசார பாரம்பரியத்தை அணுகுவதில் செயற்கை நுண்ணறிவை ஆக் கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாகரிகத்தையும் சமமான குரலாக மதிப்போம். கட் டிடக்கலை, இசை, உணவு, ஜவுளி போன்றவற்றில் மரபுகளை பகிர்ந்து கொள்வோம். யுனெஸ்கோ பாரம்பரிய அமைப்புக்கு உறுப்பு நாடுகள் கூட்டாக பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.