கவுகாத்தி,
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து துபாய் மற்றும் அபுதா பிக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. வடகிழக்கு இந்தியாவையும், மேற்கு ஆசியாவையும் நேரடியாக விமான சேவை மூலம் இணைக்கும் முதலாவது விமான நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கவுகாத்தி-துபாய் விமான சேவை, ஆகஸ்டு 4-ந் தேதியில் இருந்து செவ்வாய்க்கிழமைதோறும் இயக்கப்படும். கவுகாத்தி-அபுதாபி விமான சேவை ஆகஸ்டு 7-ந் தேதியில் இருந்து வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும்.