தேசிய செய்திகள்

கிருஷ்ணா-கோதாவரி நதி படுகையில் ஹைட்ரோ கார்பன் கண்டுபிடிப்பு

ஆந்திரபிரதேச கடல் பகுதியில் கிருஷ்ணா-கோதாவரி நதி படுகையில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதால் இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவை மிக அதிகமாக உள்ளது. இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கணிச மான அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவின் எரிசக்தி கல வையில் இயற்கை எரிவாயுவின் பங்கை சுமார் 6.7 சதவீதத்தில் இருந்து 2030-ம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக உயர்த்துவதை அரசு இலக்காக மத்திய பெட்ரோலி யம் மற்றும் இயற்கை வாயு துறை நிர்ணயித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன்

இதற்காக அரசுக்கு சொந்தமான ஆயில் இந்தியா நிறுவனம் பல்வேறு பகுதிகளில் சோதனைகளை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கிருஷ்ணா-கோதாவரி நதி படுகையில் மதிப்பீடு செய்யப்படாத மத்ஸ்யபுரி பாறை அடுக்கில் அதிக அளவு இயற்கை எரிவாயு இருப்பதை கண்ட றிந்து உள்ளது. அங்கு, சுமார் 2 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளம் இருப்பது தெரியவந்தது. இது ஆந்திரபிரதேச மாநிலம் மற்றும் அதை ஒட்டிய வங்காள விரிகுடா முழுவதும் 50 ஆயிரம் சதுர கி.மீ.க்கும் அதிக மான அளவில் பரவியுள்ளது.

ஆயத்த பணிகள்

இதுகுறித்து ஆயில் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "கிருஷ்ணா-கோதாவரி நதி படுகையில் ஆழம் குறைந்த கடலோர பகுதியில் தொடர்ச்சியான சோதனையின் போதுஇந்த கிணற்றில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் கன மீட்டர் என்ற அளவில் எரிவாயு வெளிவந்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு சுமார் 170 பேரல்கள் எரிவாயு திரவம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த உயர் மண்டலத்தை சோதிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன” என கூறி உள்ளது.

SCROLL FOR NEXT