சுப்ரீம் கோர்ட் 
தேசிய செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்; மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நம்பிக்கை தீர்மானத்தின்போது த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கத்தை கைவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

த.வெ.க. ஆட்சி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. அரசு அமைந்தது. மே 10-ந் தேதி விஜய், தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து மே 13-ந் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை தீர் மானத்தில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

இந்த வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அர சுக்கு ஆதரவாக 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து, அந்த 25 பேருக்கு எதிராகத் தகுதிநீக்க நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்தார்.

இதற்கிடையே, 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில், மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்புக் கடிதம் அளித்தனர். இதனால் அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை கோரிய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக எடப் பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகருக்குக் கடிதம் அளிக்கப்பட்டது. இதை ஏற் றுக்கொண்ட சபாநாயகர், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கைக ளைக் கைவிடுவதாக அறிவித்தார்.

ஐகோர்ட்டு எச்சரிக்கை

இதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, "வேறு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதால், மனுதாரர் கட்சி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது? இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போகிறோம்'' என எச்சரித்தது. உடனே மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டதை ஏற்று, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்த ரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து எம்.எல்.ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், "கட்சித் தாவல் தடைச் சட்டம் தொடர்புடைய இந்த விவகாரத்தில், கொறடா உத்தரவை மீறியதை உள்கட்சி விவகாரமாகக் கருத முடியாது. தகுதிநீக்க நடவடிக்கை தொடங்கிய பிறகு, அரசியல் கட்சிகள் அளிக் கும் கடிதத்தால் அதனை நீர்த்துப்போகச் செய்ய முடியாது. எனவே, இந்த விவ காரத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவைத் திரும்ப பெற அனுமதி அளித்துத் தள் ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் அல் லது சபாநாயகர், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளைக் கைவிடுவதாக அறிவித்தை ரத்து செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

மனு தள்ளுபடி

இந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதங்க ளைப் பரிசீலித்த நீதிபதிகள், இதே விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற் றொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்து இந்த மேல்முறை யீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இருப்பினும், இந்த விவகா ரத்தில் உள்ள சட்டப் பிரச்சினைகள் விசாரிக்கப்படவில்லை என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியது.

SCROLL FOR NEXT