தேசிய செய்திகள்

மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் வெற்றி: மராட்டிய வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

மராட்டியம் மீண்டும் ஒருமுறை பா.ஜனதா மற்றும் மகாயுதி கூட்டணிக்கு ஆசி வழங்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தலில் பா.ஜனதா தலைமை யிலான 'மகாயுதி' கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, மராட்டிய மக்க ளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

மராட்டியம் மீண்டும் ஒருமுறை பா.ஜனதா மற்றும் மகாயுதி கூட்டணிக்கு ஆசி வழங்கியுள்ளது. மாநகராட்சி மற்றும் நக ராட்சி தேர்தல்களில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது மாவட்ட பஞ்சா யத்து தேர்தல்களிலும் மக்கள் எங்களுக்கு பலமான ஆதரவை வழங்கியுள்ளனர். இது நல்லாட் சிக்கு கிடைத்த அங்கீகாரம்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மராட்டிய மக்கள், மாநிலத்தின் கலா சாரத்தை போற்றும் மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் ஒரு கூட்டணியையே விரும்புகிறார்கள் என்பது இந்த முடிவுகள் மூலம் தெளிவாகிறது. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, களத்தில் அயராது உழைத்த மகாயுதி கூட்டணியின் தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.