தேசிய செய்திகள்

டி.கே.சிவக்குமார்-சித்தராமையா இன்று டெல்லி பயணம்; மேலிட தலைவர்களை சந்திக்க திட்டம்

வருகிற 3-ந் தேதி கர்நாடக புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்கவுள்ள டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி செல்கிறார். அது போல சித்தராமையாவும் டெல்லி செல்ல உள்ளார்.

முதல்-மந்திரி சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்து டி.கே.சிவக்குமாருக்கு வழிவிட்டார். இதையடுத்து கர் நாடக புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் வருகிற 3-ந் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழா பெங்களூருவில் உள்ள லோக்பவனில் எளிமையான முறையில் நடக்கிறது. இதில் டி.கே.சிவக்குமாருடன் 10 பேர் மந்திரியாக பதவி ஏற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பதவிஏற்பு விழா குறித்து கலந்தாலோசனை நடத்த டி.கே.சிவக்குமார் இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுலை சந்திக்கிறார்

பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் டெல்லி செல்லும் அவர் அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அவர் இன்று இரவே பெங்களூரு திரும்புவார் என்று கூறப்படுகிறது. டி.கே.சிவக்குமாரை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் தலைவர்கள் எம்.பி.பட்டீல், தினேஷ் குண்டு ராவ், மங்களா வைத்தியா, மது பங்காரப்பா, ராகவேந்திர இட் னால், பி.ஆர்.பட்டீல், துகாராம், அன்னபூர்ணா, தன்வீர்சேட், லிஜயானந்த் காசப்பண்ணவர், அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி உள்ளிட்ட ஏராளமானவர்கள் நேரில் சந்தித்து பூங் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

4 துணை முதல்-மந்திரிகள்

இதேபோல மந்திரி சபையில் இடம்பெறும் 10 பேர் யார்-யார் என்பதை இறுதி செய்ய முதல்-மந்திரி சித்தராமையாவும் இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தஉள்ளார். தனது ஆதரவாளர்கள் அதிகம் பேருக்கு மந்திரி பதவி வழங்குமாறு சித்தராமையா கேட்க உள்ளார். அவர் தன்னுடன் பெயர் பட்டியலையும் எடுத்து செல்கிறார். 4 துணை முதல்-மந்திரிகள் நியமனம் குறித்தும் அவர் விவா திக்க உள்ளார். அவரது மகன் யதீந்திராவுக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதி. அவருக்கு ஓ.பி.சி. பிரிவில் துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை வைக்க உள்ளார். இதை கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.