பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று அங்கீகரித்தார். புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படும் வரை 'கேர்டேக்கர்' முதல்-மந்தி ரியாக நீடிக்குமாறு கவர்னர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் சட்டசபை குழு, அதாவது எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.
பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், வரும் 3ஆம் தேதி கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்
அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்க உள்ளார்.
சட்டமன்ற குழுத் தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். அதன்பிறகு வருகிற 1-ந் தேதி டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் விழா நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள 'கிராண்ட் ஸ்டெப்ஸ்' (நீளமான படிக்கட்டுகள்) பகுதியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அங்கு கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டி.கே.சிவக்குமாருடன் சுமார் 15 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.