தேசிய செய்திகள்

தொழில் முதலீடுகளை ஈர்க்க டி.கே.சிவக்குமார் 3 நாட்கள் ஜப்பான் சுற்றுப்பயணம்

கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கான முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்கிறார். இதற்காக அவர் இன்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்.

ஆலோசனை

இந்த பயணத்தின் போது அவர் இன்று நகோயா நகரிலும், நாளை (திங்கட்கிழமை) ஒசாகா நகரிலும், 25-ந் தேதி டோக்கியோ நகரிலும் தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கான முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் ஏற்கனவே ஜப்பான் சென்றுள்ளனர். இதில் தொழில்துறை முதன்மை செயலாளர் செல்வகுமார், பெருநகர பெங்களூரு ஆணைய கமிஷனர் மகேஸ்வர்ராவ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். அங்கு டி.கே.சிவக்குமார் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருமாறு ஜப்பான் தொழில் நிறுவனங்களுக்கு டி.கே.சிவக்குமார் நேரில் அழைப்பு விடுக்க உள்ளார்.

SCROLL FOR NEXT