பெங்களூரு
கர்நாடகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடாது என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெலகாவியில் எம்.இ.எஸ். அமைப்பு கருப்பு தினத்தை அனுசரித்துள்ளது. கன்னடர்களும், மராத்தி மக்களும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. இந்த மண் ணில் வசிக்கும் ஒவ்வொருவரும் இங்கு கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். கன் னடர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பதாக எழுந்த விவகாரத்தில் கன்னட அமைப்பினர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூ டாது.
சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவது சரியல்ல.கலாசார காவல் என்ற பெயரில் அத்துமீறி செயல்படுவதை அனுமதிக்க முடியாது. ஏதாவது புகார் இருந்தால் அதை அரசிடம் தெரிவிக்க வேண்டும். போலீ சார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். கன்னட போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற தீர்மானித்துள்ளோம். இதுகுறித்து கோப்புகள் தயாராகி வருகின்றன.
இந்த நேரத்தில் கன்னட அமைப்பினர் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டால் அதற்கு ஆட்சேபனை வெளிப்படும். அதனால் கன்னட அமைப்பினர் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்குரிமை என்பது வாழும் உரிமையை போன்றது. ஆனால் தேர்தல் கமிஷன் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்துள்ளது.குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை வழங்குவது நமது கடமை.
கர்நாடகத்தில் தகுதியான வாக்காளர்களை நீக்க எந்த ரீதியில் முறைகேடுகள் நடை பெற்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். கர்நாடகத்தில் கன்னட கொடியை ஏற்று வதை கட்டாயமாக்குவது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் கன்னட கொடியை ஏற்றுவதை கட்டாயமாக்க உள்ளோம். இதற்கான உத்தரவு இந்த மாதத்தில் பிறப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.