தேசிய செய்திகள்

தங்கம் வாங்காதீர்கள்: மோடியின் அறிவுரை.. தோல்வியின் சான்றுகள் - ராகுல் காந்தி விமர்சனம்

12 ஆண்டுகளில் நாட்டை இந்த நிலைக்கு பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புது டெல்லி,

அன்னிய செலாவணியை சேமிக்கும் நோக்கில் திருமணத்துக்கு ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம். எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேற்காசிய போர் நெருக்கடியையொட்டி அவர் இதை தெரிவித்து இருந்தார்.

இதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது:-

நேற்று மோடி அவர்கள் மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள். பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள். உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள், மெட்ரோவில் பயணம் செய்யுங்கள். வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.

இது அறிவுரை அல்ல இது தோல்வியின் சான்றுகள். 12 ஆண்டுகளில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார், மக்கள் என்ன வாங்க வேண்டும். என்ன வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும். எங்கே செல்லக்கூடாது என்று சொல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஒவ்வொரு முறையும் பொறுப்பை மக்கள் மீது சுமத்திவிட்டு, தங்களது பொறுப்பிலிருந்து தப்பித்து கொள்கிறார்கள். நாட்டை நடத்துவது என்பது இனி ஒரு சமரசம் செய்து கொண்ட பிரதமரால் இயலாத காரியம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.