புதுடெல்லி,
வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக நடப்பு (2026-27)நிதியாண் டில் ரூ.17.20 லட்சம் கோடி கடன் வாங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் இலக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நடப்பு நிதியாண்டின் 2-வது அரையாண்டு காலத்துக்கு (அக்டோபர்-மார்ச்) அதாவது அடுத்த 6 மாதங்க ளுக்கு ரூ.7.86 லட்சம் கோடி கடன் வாங்க இருப்பதாக மத்திய அரசு தெரி வித்து உள்ளது. இதில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பசுமைப் பத்திரங்கள் வெளியீடும் அடங்கும்.
பத்திரங்கள் விற்பனை மூலம் வெளிச்சந்தையில் இருந்து இந்த கடன் வாங் கப்படுவதாகவும், இதற்கான ஏல நடைமுறை அனைத்தும் 23 வாரங்களில் நிறைவடையும் எனவும் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த கடனையும் சேர்த்து நடப்பு நிதியாண்டில் வாங்கப்படும் மொத்த கடன் ரூ.15.99 லட்சம் கோடியாக இருக்கும். இது பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ.1.20 லட்சம் கோடி குறைவாகவே இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக முதல் அரையாண்டு காலத்தில் ரூ.8.13 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டு இருந்தது. இதுவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட (ரூ.8.20 லட்சம் கோடி) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிச்சந்தையில் இருந்து மத்திய அரசு வாங்கும் கடனானது 3 ஆண்டு கள், 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் மற்றும் 50 ஆண்டுகள் ஆகிய கால அளவு களை கொண்ட பத்திரங்களில் பரவலாக வாங்கப்படும் என்றும் நிதியமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.