மராட்டியம்,
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் வரையிலான 508 கி.மீ., துாரத்துக்கு, புல்லட் ரயில் செயல்படுத்தும் பணியை தேசிய அதிவிரைவு ரயில் கழகம் செய்து வருகிறது. இதற்காக, மராட்டியத்தில், 156 கி.மீ.,யும், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பகுதியில் 4 கி.மீ.,யும், குஜராத்தில் 384 கி.மீ., துாரத்துக்கும் ரயில் பாதை அமைய உள்ளது.
சுமார் 508 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாதையின் பயண நேரம் தற்போது 7 மணி நேரமாகும். புல்லட் ரெயில் செயல்பாட்டுக்கு வந்த பிறகு ரெயில் பயண நேரம் 4 மணி நேரமாக குறையும். இந்த திட்டத்திற்கான பாதை அமைப்பதும் சவால் நிறைந்த பணிகளாகும்.
இதற்காக 21 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைகிறது. இதில் 7 கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் அமைக்கப்படுகிறது. பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து தானே கிரீக் வரை அமைக்கப்படுகிறது.
கடலின் அடிப்பகுதிக்கு கிழே மண் மற்றும் பாறை அடுக்குகளுக்கு இடையே சுரங்கம் தோண்டப்படுகிறது. 75 முதல் 200 அடி ஆழத்துக்குள் இந்த பதை செல்கிறது. இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இதுவாகும்.