திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு அரசு தாலுகா ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் டாக்டருக்கு, மூத்த டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூத்த டாக்டர் பினு (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் டாக்டர் பினுவை பணியிடை நீக்கம் செய்து மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.