தேசிய செய்திகள்

ஓடிபி, ஆதார், வங்கி கணக்கு தகவல்களை யாருடனும் பகிராதீர்கள்; பிரதமர் மோடி அறிவுரை

பாஸ்வேர்டுகளையும் அடிக்கடி மாற்றுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்

டெல்லி,

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோவில் மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் 131வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது;-

டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான் ஏற்கனவே பேசியுள்ளேன். ஆனாலும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

டிஜிட்டல் கைது, நிதி மோசடி பெயரில் ஏராளமானோர் குறிவைக்கப்படுகின்றனர். மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கின்றனர்.

இதில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்கள் ஓடிபி, ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற தகவல்களை யாருடனும் பகிராதீர்கள்.

உணவு, உடைகளை சீசனுக்கு ஏற்றார்போல் பயன்படுத்துவதுபோல உங்கள் பாஸ்வேர்டுகளையும் அடிக்கடி மாற்றுங்கள். சில நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டுகளை மாற்றுவதை வழக்கமாக கொள்ளுங்கள்’ என்றார்.