சபரிமலை,
சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 5 நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன் தனது 'எக்ஸ்' தளத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு சபரிமலையை புனிதமாகவும், பம்பையை தூய்மையாகவும் வைத்திருக்க பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சபரிமலை, புனித பயணத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதி. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு என்றும் சபரிமலை புனிதமானது. ஆதலால் சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் அதன் புனிதத்தை பாதுகாத்திட ஒத்துழைப்பு தாருங்கள். அய்யப்ப பக்தர்கள் ஆடைகள், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை பம்பை ஆற்றில் வீச வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.