தேசிய செய்திகள்

டிரோன் இறக்குமதி- லஞ்ச வழக்கு: கார்ப்பரேட் குழுவின் மூத்த நிர்வாகி கைது

புதுடெல்லியில் டிரோன் இறக்குமதி தொடர்பான லஞ்ச வழக்கில், ஒரு பெரிய கார்ப்பரேட் குழுவின் மூத்த நிர்வாகியை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

புதுடெல்லி,

புதுடெல்லியில் டிரோன் இறக்குமதி தொடர்பான லஞ்ச வழக்கில், ஒரு பெரிய கார்ப்பரேட் குழுவின் மூத்த நிர்வாகியை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பாரத் மாதூர் என்ற நபர், ஒரு நிறுவனத்தில் மூத்த துணை தலைவர் பதவியில் பணியாற்றி வந்தார். இவர் மீது டிரோன்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெற, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த லஞ்சம், ஒரு ஏரோஸ் பேஸ் நிறுவனத்திற்காக டிரோன் இறக்குமதியை எளிதாக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

SCROLL FOR NEXT