மும்பை
தாய்லாந்தில் இருந்து மராட்டியத்திற்கு ரூ. 13.44 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு நேற்று முன் தினம் விமானம் வந்தது. அந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் காலணிகளில் (ஷூ) சோதனை செய்தனர். அந்த சோதனையில் அப்பயணி ஷூவுக்குள் மறைத்து 382 கிராம் போதைப்பொருள் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்ப்பொருளின் மதிப்பு ரூ. 13.44 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட பயணி சிறையில் அடைக்கப்பட்டார்.