தேசிய செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை; தமிழக அரசுக்கு கேரள முதல்-மந்திரி கடிதம்

கேரளாவில் 2025-ம் ஆண்டில் 36,314 போதை பொருள் தொடர்பான வழக்குகள் பதிவாகி உள்ளன.

கொச்சி

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழகம் உள்பட அண்டை மாநில அரசுகளுக்கு கேரள முதல்-மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.

கேரளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் வி.டி. சதீசன் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். மாநிலத்தில் ஆபரேஷன் டூபான் என்ற பெயரில் போதை பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டு நடவடிக்கை

இந்த விசயத்தில் கூட்டு நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தி தமிழகம் உள்பட அண்டை மாநில அரசுகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், போதை பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வழக்குகள்

கூட்டு நடவடிக்கை அவசியம் என அண்டை மாநிலங்களை அவர் வலியுறுத்தி உள்ளார். இதன்படி, தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். கூட்டு நடவடிக்கை திட்டங்களை முறைப்படுத்த உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

கேரளாவில் 2025-ம் ஆண்டில் 36,314 போதை பொருள் தொடர்பான வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2024-ம் ஆண்டில் 27,530 என்ற அளவில் இருந்தன.