தேசிய செய்திகள்

ஒரே வீட்டில் 6 மாதம் உல்லாச வாழ்க்கை...மதுபோதையில் இளம்பெண் கொலை..லாரி டிரைவர் கைது

13-ந்தேதி இரவு 2 பேரும் உட்கார்ந்து மது அருந்தினோம். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தோம் என கைதான டிரைவர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி திருமணம் செய்யாமல் 6 மாதமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற தண்ணீர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இன்ஸ்டா பழக்கம்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை சேர்ந்தவர் அனுஷா (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் சரத். இவர், பெங்களூருவில் தண்ணீர் லாரி ஓட்டும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும், சரத், அனுஷா இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து. இருவரும் பெங்களூரு மல்லேசுவரம் 7-வது கிராசில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

திருமணம் செய்யாமலேயே கடந்த 6 மாதங்களாக 2 பேரும் ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் உல்லாசமாக இருந்து வந்தனர். இதற்கிடையில், கடந்த 15-ந் தேதி தனக்கு தெரிந்த வக்கீலை தொடர்பு கொண்ட சரத், தன்னுடைய காதலி அனுஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும், அடுத்ததாக தனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும், நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு வக்கில் அதிர்ச்சி அடைந்தார்.

காதலி கொலை

பின்னர் சேஷாத்திரிபுரம் போலீசாரை தொடர்பு கொண்ட வக்கீல், மல்லேசுவரம் 7-வது கிராசில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது பற்றி தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து சென்று வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அனுஷா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் தலைம றைவான சரத்தை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், ஹாசனில் பதுங்கி இருந்த சரத் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

ஊருக்கு செல்வதாக...

அப்போது கடந்த 13-ந்தேதி இரவு 2 பேரும் உட்கார்ந்து மது அருந்தினோம். இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது திடீரென தனது சொந்த ஊருக்கு செல்வதாக அனுஷா கூறியுள்ளார். உல்லாசமாக இருக்கும்போதுதான் இதுபோன்று கூறுவாயா? என்று கோபட்டு ஊருக்கெல்லாம் செல்ல வேண்டாம், இங்கேயே இருக்கும்படி சரத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த சரத், அனுஷாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக அவர் இறந்து விட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், படுக்கையில் அனுஷா உடலை போட்டு விட்டு சரத் தப்பி ஓடி இருந்தார். மறுநாள் வக்கீலிடம் அவர் அனுஷாவை கொலை செய்தது பற்றி தெரிவித்தது தெரியவந்துள்ளது. கைதான சரத் மீது சேஷாத்திரிபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் தளம் மூலம் உருவான காதல் உறவு திருமணம் செய்யாமல் 6 மாத வாழ்கைக்கு பிறகு கொலையில் முடிந்த சம்பவம் பெங்களூருவை உலுக்கி உள்ளது.