லக்னோ,
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து நேற்று நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்நிலையில், நேபாள வான்பரப்பில் சென்றபோது பலத்த காற்றுடன் மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம் நேபாளத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்பட்டது. உத்தரபிரதேசத்தில் லக்னோவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர், நேபாளத்தில் வானிலை சீரடைந்ததை தொடர்ந்து லக்னோவில் இருந்து விமானம் மீண்டும் நேபாளம் புறப்பட்டு சென்றது.