தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இட்டாநகர்,

அருணாச்சல பிரதேசத்தின் லோகிட் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.35 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.801 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 96.543 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT