தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு

கத்ரா நகரில் இருந்து கிழக்கே 91 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

காஷ்மீர்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா நகரில் இன்று அதிகாலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது.

கத்ரா நகரில் இருந்து கிழக்கே 91 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.