புதுடெல்லி,
லே லடாக் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.01 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
130 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.636 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.295 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த எந்தவித தகவலும் உடனடியாக வெளியாக வில்லை.
முன்னதாக, ஆந்திராவில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் ரிக்டர் 3.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.