புதுடெல்லி,
சிக்கிமின் மங்கன் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2.16 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சத்தீஸ்கரின் பலோட் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மதியம் 3.16 மணிக்கு ரிக்டர் 2.7 அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இந்த நிலையில், உத்தரகாண்டின் பித்தோராகர் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மாலை 4.56 மணிக்கு ரிக்டர் 3.5 அளவில் பதிவாகி உள்ளது. சிக்கிம், சத்தீஸ்கர், உத்தரகாண்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.