மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது அந்த சிறுமியை 65 வயதுடைய முதியவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார். குழந்தையை தேடிய பெற்றோர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா மூலம் குற்றவாளி சிறுமியை தூக்கி செல்வதை பார்த்து போலீசில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து 65 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.