தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்: யானை தாக்கி மூதாட்டி பலி

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவடம் சத்ரு கிராமத்தை சேர்ந்த மூதாட்டி தாகர் மஞ்சிகி (வயது 65). இவர் நேற்று இரவு தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

யானை தாக்கி பலி

வனப்பகுதிக்கு அருகே உள்ள அவரது வீட்டிற்குள் நேற்று காட்டு யானை வந்தது. குடிசை வீட்டில் மூதாட்டி தாகர் மஞ்சிகி உறங்கிக்கொண்டிருந்த நிலையில் வீட்டை யானை இடிக்க முயன்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தாகர் மஞ்சிகி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த காட்டு யானை மூதாட்டி தாகர் மஞ்சிகியை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி தாகர் முஞ்சிகி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.