தேசிய செய்திகள்

சத்தீஷ்கார் சோகம்: யானை தாக்கி மூதாட்டி பலி

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டம் படுரியாடன் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சுக்மிதா பாய் (வயது 70). இவர் இன்று அதிகாலை கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

யானை தாக்கி பலி

அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை மூதாட்டி சுக்மிதா பாயை தாக்கியது. யானை தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.