மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:- அரியானா சட்டமன்ற தேர்தலில் மோசடி நடைபெற்றது தேர்தல் ஆணையர்களுக்கு தெரிந்தே நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும். முக்கிய தலைவர்கள் தோல்வி அடைகிறார்கள்.
ஆனால் மோடி, அமித்ஷா மட்டும் ஏன் தோற்கவில்லை. இந்தியாவில் அனைத்து தேர்தல்களிலும் மோசடி நடைபெற்றுள்ளது. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளிலும் குளறுபடி நடந்துள்ளது. தேர்தல் ஆணைய செயல்பாடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஞானேஷ் குமார் மீறியுள்ளார். வாக்கு திருட்டை அம்பலப்படுத்திய அதே காலக்கட்டத்தில்தான் ஆணையர்கள் ஆட்சேபனை கடிதம் எழுதி எழுதினர். மோடி, அமித்ஷாவிடம் விசாரணை நடத்த வேண்டும்.
ஜனநாயகத்தை அழித்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை அழிக்க விட மாட்டோம்.”என்றார். இதற்கிடையே, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. நிராகரித்துள்ளது. அவரது செய்தியாளர் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், ஜனநாயக வழியில் மக்களின் ஆதரவைப் பெற முடியாததால் அவர் விரக்தியடைந்துள்ளதாகவும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி விமர்சித்தார்.