புதுடெல்லி,
நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் புதிதாக வாங்கும் மின்சார இருசக்கர வாகனங்களின் வாகனபதிவுகளும் உயர்ந்து வருகிறது.
அந்தவகையில் நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பதிவான மின்சார வாகன பதிவுகள் குறித்தான விவரத்தை மத்திய அமைச்சகத்தின் வாகன் டேட்டா தெரிவித்துள்ளது. இதில் நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரம் மின்சார இருசக்கர வாகனங்கள் கடந்த மாதத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு ஜனவரியை காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும்.