தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தசரா கொண்டாட்டத்தில் யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு

இந்த சம்பவத்தில் யானைப் பாகன் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இறுதியில், யானைக்கு மயக்க மருந்து செலுத்தி வனத்துறையினர் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற தசாரா பெருவிழா ஊர்வலத்தின் போது எதிர்பாராதவிதமாக யானை ஒன்று மிரண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யானையின் மீது கட்டப்பட்டிருந்த 650 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட வெள்ளி அம்பாரி கீழே சரிந்து விழுந்ததுடன், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் மற்றும் வாகனங்கள்.சேதமடைந்தன இதையடுத்து ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சிவப்ப நாயக்கா அரண்மனையில் இருசைமாறி திரும்பியது. அந்த யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டிருந்த வெள்ளி அம்பாரி இருந்தது.யானை திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், வெள்ளி அம்பாரி கீழே விழுந்து சேதமடைந்தது. மேலும், யானை தாறுமாறாக ஓடியதில் 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அச்சமடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். யானையை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் நீண்ட நேரம் போராடினர். இந்த சம்பவத்தில் யானைப் பாகன் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இறுதியில், யானைக்கு மயக்க மருந்து செலுத்தி வனத்துறையினர் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SCROLL FOR NEXT