தேசிய செய்திகள்

மூணாறில் எருமை மாடுகளை பார்த்து மிரண்டு ஓடிய யானைகள்

பொதுவாக கூர்மையான கொம்புகள் கொண்ட எருமை மாடுகள் தாக்கும் அபாயம் இருப் பதால், காட்டு யானைகள் அவற்றை கண்டால் விலகி செல்வது வழக்கமாகும்.

மூணாறு,

இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே மாங்குளம் பகுதியில் உள்ள ஆனைகுளம் ஆற்றில் காட்டு யானைகள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். இந்தநிலையில் கோடை வெயில் காரணமாக ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

இதை யடுத்து நேற்று ஒரு காட்டு யானை அதன் குட்டியுடன் தண்ணீர் குடிக்க ஆற்றங்கரை பகுதிக்கு வந்தது. அப்போது அப்பகுதியில் விவசாயி வளர்த்து வந்த 2 எருமை மாடுகள் மேய்ந்து கொண்டி ருந்தன. இதனை பார்த்த அந்த யானைகள் தண்ணீர் குடிக்காமல் பிளிறியபடி அங்கிருந்து ஓடியது.

பொதுவாக கூர்மையான கொம்புகள் கொண்ட எருமை மாடுகள் தாக்கும் அபாயம் இருப் பதால், காட்டு யானைகள் அவற்றை கண்டால் விலகி செல்வது வழக்கமாகும்.