தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் காணப்படாத பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பந்திபோராவில் சந்தஜி பகுதியில் பாதுகாப்பு படையினர் அடையாளம் காணப்படாத ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுபற்றி காஷ்மீர் போலீசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த மாதம் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.