தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கததுறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது, ஏர்செல்-மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிப்பதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகள் பதிவு செய்தது.

இந்த வழக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கததுறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இரு குற்றப்பத்திரிகைகளிலும் ப.சிதம்பரம், குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டார்.இருப்பினும், சட்டவி ரோத பண பரிமாற்ற விவகாரங்களில், வழக்கு தொடர அனுமதி பெறுவது கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2024-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

அதன் அடிப்படையில், ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை கடந்த 10-ந்தேதி உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளது. அனுமதி உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது. ப.சிதம்பரத்துக்கு எதிராக விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.