தேசிய செய்திகள்

பி.எஃப். பங்களிப்பு குறைப்பு யோசனை நிராகரிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எஃப். பங்கு தொகையை தற்போதைய 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கும் யோசனையை நிர்வாக அமைப்பு நிராகரித்து விட்டது.

புனே

இப்போதைய ஏற்பாட்டின்படி தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை தொழிலாளரும், பணிக்கு அமர்த்துபவரும் வைப்பு நிதியில் செலுத்தி வரவேண்டும். தொழிலாளர் பணி ஓய்வு பெறும்போது அவரது தொகை வழங்கப்படும்.

இந்நிலையில் இப்பங்களிப்பை 10 சதவீதமாக குறைக்கவும், அந்த பத்து சதவீதத்தில் அடிப்படைச் சம்பளம் மற்றும் தினப்படி ஆகியவற்றையும் இணைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நிர்வாக அமைப்பு சனியன்று ஆலோசித்தது. எனினும், இப்போதைய நிலையையே தொடர பணியாளர், முதலாளிகள் மற்றும் அரசுத் துறை பிரதிநிதிகள் கோரியதால் பரிசீலினையில் யோசனையை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் தொழிலாளர் துறை செயலர், அவர்களது கருத்துகளை பதிவு செய்து கொண்டுள்ளோம். அரசு இது பற்றி முடிவு செய்யும் என்றார். கூட்டத்தில் மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா கலந்து கொண்டார்.

SCROLL FOR NEXT