தேசிய செய்திகள்

இன்னும் 30 ஆண்டுகள் ஆனாலும் காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாது: அமித்ஷா

ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மக்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், எஞ்சியிருக்கும் அரசியல் செல்வாக்கையும் அந்தக் கட்சிகள் இழக்க நேரிடும் .

காங்கிரஸ் கட்சியையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள்போராட்டங்களில் ஈடுபடுவதை விடுத்து, மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் ரூ.8,941 கோடி மதிப்பிலான 33 டெல்லி குடிநீர் வாரியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமித்ஷா பேசியதாவது: மக்களின் தீர்ப்பை அரசியல் தந்திரங்கள் மூலமாகவோ, கூட்டமாகப் போராடுவதன் மூலமாகவோ மாற்ற முடியாது . தேர்தலில் வெற்றி பெற விரும்பும் கட்சிகள் மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் எந்தப் பயனும் ஏற்படாது.

30 ஆண்டுகளுக்கு வரமுடியாது

ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மக்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், எஞ்சியிருக்கும் அரசியல் செல்வாக்கையும் அந்தக் கட்சிகள் இழக்க நேரிடும் . பாஜக தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் நான் கூறியபோது, எதிர்க்கட்சிகள் மீண்டும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை அரசியல் காரணமாக அடுத்த 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது.

தங்களுக்குச் சாதகமாக இருந்தால்

பாஜக வெற்றி பெறும்போதெல்லாம் தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது மட்டுமே அவற்றை ஏற்றுக்கொள்கின்றன. கேரளா, இமாசலப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றபோதும் அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் ஆணையமும்தான் இருந்தன ” என்றார்.

யமுனை நதியைத் தூய்மைப்படுத்த நடவடிக்கை

டெல்லியின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அமித் ஷா, யமுனை நதியில் கழிவுநீரும் தொழிற்சாலைக் கழிவுகளும் கலப்பதற்கு முந்தைய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசுகளே காரணம் . யமுனை நதியைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு, டெல்லி, அரியானா மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறோம், 2029-ம் ஆண்டு மே மாதத்தில் தூய்மையான யமுனை நதியுடன் மக்களைச் சந்திப்போம்” என்றார்.

SCROLL FOR NEXT