டிகே சிவக்குமார்  
தேசிய செய்திகள்

பெட்ரோலில் அதிக எத்தனால் கலப்படம்; கர்நாடக முதல் மந்திரி டிகே சிவக்குமார் மீண்டும் குற்றச்சாட்டு

வாகனங்களின் செயல்பாடு, பெட்ரோலின் தரம், பொதுமக்களின் பாது காப்பு மிக முக்கியம். எத்தனால் குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதால் அதிக லாபம் சம்பாதிக்க அதை அதிகமாக கலப்படம் செய்வது சரியல்ல.

பெங்களூரு,

பெட்ரோலில் அதிக எத்தனால் கலப்படம் செய்யும் பிரச்சினையை தேசிய அளவில் தீவிரமாக கொண்டு செல்வோம் என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பயண தூரம்

கர்நாடகத்தில் பெட்ரோலில் 31 சதவீதம் எத்தனால் கலப்படம் செய்துள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. இதை அரசு தீவிர மாக எடுத்துக் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட மந்திரிக்கு இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பெட்ரோல் அளவுக்கு ஏற்ற பயண தூரம் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். மேலும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருவதாகவும் தெரிவித்தனர். நாங்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மட்டும் சோதனை செய்யவில்லை. எத்த னால் கலப்படம் செய்யும் பகுதியிலும் சோதனை செய்தோம். பெட்ரோலில் எப் படி கலப்படம் செய்யப்படுகிறது என்பது குறித்த ஆவணங்களையும் சேகரித்துள்ளோம்.

பாதுகாப்பு முக்கியம்

மத்திய அரசு இவற்றை ஆய்வு செய்யும் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்க முடியாது. வாகனங்களின் செயல்பாடு, பெட்ரோலின் தரம், பொதுமக்களின் பாது காப்பு மிக முக்கியம். எத்தனால் குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதால் அதிக லாபம் சம்பாதிக்க அதை அதிகமாக கலப்படம் செய்வது சரியல்ல.

பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவது சரியல்ல. இந்த பிரச்சினையை நாங்கள் தேசிய அளவில் மிக தீவிரமாக கொண்டு செல்வோம். இந்த மோச மான நிலையை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த விஷயத்தில் பா.ஜனதா, ஜன தாதளம் (எஸ்) தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்?. பொதுமக்கள் சார்ந்த ஒவ் வொரு பிரச்சினையிலும் அவர் குரல் எழுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT