தேசிய செய்திகள்

கேரளாவில் வெடி விபத்து: 13 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் வெப்பத்தால் திடீரென வெடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

கேரள மாநிலம் திருச்சூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 26ஆம் தேதி நடைபெறும் பூரம் திருவிழாவுக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

திருச்சூர் பட்டாசு உற்பத்தி ஆலை விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் என அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT