தேசிய செய்திகள்

உப்பள்ளி-ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

உப்பள்ளி-ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பயணிகளின் வசதிக்காக எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-ராமேசுவரம்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில்கள் (வண்டி எண்: 07355/07356) சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07355) வருகிற 27-ந்தேதி வரை இயக்கப்பட இருந்தது. இந்த ரெயில் சேவை அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 29-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (07356) வருகிற 28-ந்தேதி வரை இயக்கப்பட இருந்தது. இந்த ரெயில் சேவை அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT