தேசிய செய்திகள்

3-நாள் பயணமாக உக்ரைன், போலந்து செல்லும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

3 முதல் 5 -ம் தேதி வரை உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், உக்ரைன் மற்றும் போலந்துக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் வரும் 3 முதல் 5 -ம் தேதி வரை உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார். அவர் தனது உக்ரைனிய இணையான ஆண்ட்ரி சிபிஹா மற்றும் போலந்தின் துணைப் பிரதமர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோருடன் இருதரப்பு ஆலோசனைகளை மேற்கொள்வார்.

இப்பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், பிராந்திய நிகழ்வுகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் ஜெய்சங்கரின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

SCROLL FOR NEXT