தேசிய செய்திகள்

திடீரென முடங்கிய பேஸ்புக்..பயனர்கள் கடும் அவதி

சேவை முடங்கியதற்கு பேஸ்புக் நிறுவனம் தனது மன்னிப்பை கோரியுள்ளது.

புதுடெல்லி,

மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. இந்த செயலிகளை இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுமார் 350 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென பேஸ்புக் சேவை, இந்தியா உட்பட உலகத்தின் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியுள்ளது. கணக்கு தானாகவே லாக் அவுட்ஆவது, பதிவுகள் ஏற்கப்படாமல் இருப்பது, ஏரர் காட்டுவது உள்ளிட்ட பிரச்சினைகளை பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

பல லட்ச பயனர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பேஸ்புக்கின் தகவல் மையங்கள் தொடர்பு கொள்வதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சேவை முடங்கியதாகவும், இன்னும் சில நேரங்களில் சரிசெய்யப்படும் எனவும், தடங்கலுக்கு வருந்துகிறோம், மன்னிப்பும் கோரியுள்ளது.

மொபைலில் பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும், டெக்ஸ்டாப் (system)பயன்படுத்தும் பயனர்களுக்கு சிக்கல் நிலவி வருகிறது.