பெங்களூரு,
பொதுவாக விவசாய தோட்டங்களில் அதிகளவில் பயிர் விளைந்திருந்தால் கண் திருஷ்டி விழாமல் இருக்க சோளக் காட்டு பொம்மை, பிய்ந்துபோன செருப்பு, கருப்பு மை பூசப்பட்ட பானையை தொங்கவிடுவது வழக்கம்.
ஆனால் கர்நாட கத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களது தோட்டங்களில் விளைவிக்கப்படும் மக்காச்சோளம், புடலங்காய், தர்ப்பூசணி ஆகியவை மீது கண் திருஷ்டி விழாமல் இருக்க நடிகைகளின் படங்களை தோட்டங்களில் தொங்கவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில், கதக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது மிளகாய் தோட்டத்தில் நடிகைகளின் படங்களை தொங்கவிட்டுள்ளார். அதாவது முல்குண்ட் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்த். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் மிளகாய் செடிகளை சாகுபடி செய்துள்ளார். தற்போது மிளகாய் செடிகளில் மிளகாய்கள் காய்த்து தொங்குகின்றன.
இதனால் கண் திருஷ்டி விழாமல் இருக்கவும், மிளகாய் செடி களில் காய்த்து தொங்கும் மிளகாய்களை பார்க்காமல் இருக்க வும் பிரபல நடிகைகளான ரச்சிதா ராம், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் புகைப்படங்களை 2 கம்புகளை நட்டு தொங்க விட்டுள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் அந்த வழியாக செல்வோரின் கண்கள் மிளகாய் செடிகளை பார்க்காமல், நடிகைகளின் படங்களை பார்த்து செல்வார்கள் என்பதும், இதன் மூலம் கண் திருஷ்டி விழாது என்பதும் விவசாயி சிவானந்தின் கூற்றாக உள்ளது. இருப்பினும் இந்த புது ஐடியா மக்கள் மத் தியில் பேசு பொருளாகி வருகிறது.