தேசிய செய்திகள்

இடுக்கியில் ஜீப் கவிழ்ந்து விவசாயி பலி, 3 பேர் படுகாயம்

நெடுங்கண்டம் அருகே வந்த போது திடீரென ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் கவிழ்ந்தது.

இடுக்கி,

இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே சதுரங்கப்பாறை சாந்தருவி பகுதியைச் சேர்ந்தவர் சினு விஜயன் (வயது 39). விவசாயி. நேற்று இவர் தனது அண்ணன் பினிஷ் (45), பினு (40) மற்றும் காஞ்சியார் பகுதியை சேர்ந்த ரதீஷ் (42) ஆகியோருடன் வட்டப்பாறை பகுதியில் இருந்து உடுமஞ்சோலை நோக்கி ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.

நெடுங்கண்டம் அருகே வந்த போது திடீரென ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சினு விஜயன் உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்கண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT