தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா அய்யாக்கண்ணு ஆலோசனை

விவசாயிகள் போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா அய்யாக்கண்ணு ஆலோசனை

புதுடெல்லி

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் பல்வேறு போராட்டம் நடந்துவருகிறது. 36வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முகமூடி அணிந்த ஒருவர், விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டது.

இதேபோல சாட்டையால் அடித்துக் கொண்டு விவசாயிகள் கேரள இல்லம் வரை பேரணியாக சென்றனர். அப்போது பிரதமரை கெஞ்சி வேண்டுவதுபோல கோஷங்களையும் எழுப்பினர்.இன்று 37 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் கிழிந்த ஆடைகளுடன் காலி பட்டிகளை மாலையாக அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா என்பது பற்றி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆலோசனை நடத்தி வருகிறார்.இது குறித்து விவசாயிகளிடம் கருத்கேட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT