பணி இடைநீக்கம் 
தேசிய செய்திகள்

ஆய்வு கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய பெண் அதிகாரி பணி இடைநீக்கம்

பெண் அதிகாரி குறட்டை விட்டு தூங்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அகோலா,

வறட்சி குறித்த ஆய்வு கூட்டத்தில் தூங்கிய பெண் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து மந்திரி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மராட்டியத்தில் எல்நினோ காரணமாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதையடுத்து மாநில விவசாயத்துறை மந்திரி தத்தாத்ரே பார்னே தலைமையில் அகோலாவில் அவசர வறட்சி நிவாரண கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்ற பெண் புவி விஞ்ஞானி ஷில்பா ஜனக், நாற்காலியில் அமர்ந்தபடியே கண் அயர்ந்து தூங்கினார். அவர் தூங்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடமை தவறிய குற்றத்திற்காக மராட்டிய குடிமை பணி விதியின் கீழ் பெண் அதிகாரி ஷில்பா ஜனக்கை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மந்திரி தத்தாத்ரே பார்னே அதிரடியாக உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT