தேசிய செய்திகள்

78 வயது முதியவரை தாக்கிய பெண் உதவி ஆய்வாளர்: டெல்லி போலீஸ் நடவடிக்கை

உதவி ஆய்வாளர் மற்றும் அவரது கணவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

புது டெல்லி மாநிலத்தின், வடமேற்கு டெல்லி மாவட்டத்தில் உள்ள ரோகிணி செக்டார் 7 என்ற பகுதி முதியவர் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு, முதியவர் தனது கடையை நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த வாகனம் கடைக்கு முன்னால் நிறுத்தபட்டது.

முதியவர் அந்த வாகனத்தை எடுக்குமாறு கூறினார்.அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர், தான் ஒரு அதிகாரி என்ற தோரணையில் முதியவரிடம் வாக்குவாதம் செய்து, அவரை அறைந்துள்ளார். முதியவர் தாக்கப்பட்டதை கண்ட அந்த பகுதி மக்கள் மற்றும் பிற வியாபாரிகள் உடனடியாக அங்கு கூடினர்.

அப்போது கூட்டத்தில் இருந்தவர்களை விலகி செல்லுமாறு ஒரு போலீஸ் அதிகாரி மிரட்டியதாக மக்கள் தெரிவித்தனர். மோதல் முற்றிய நிலையில், அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் தாக்கப்பட்ட 78 வயது முதியவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் மற்றும் அவரது கணவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது உதவி ஆய்வாளர் தான் கர்ப்பமாக இருப்பதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்ததாகவும், அதற்காகவே சில நிமிடங்கள் கார் நிறுத்தியதாகவும். மேலும் தனது பரிசோதனை முடிந்ததும் அதை எடுத்து விடுவதாக போலீசாரியிடம் கூறினார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.